ராம் டைரக்சனில் நடிக்கும் நிவின்பாலி!

79

நிவின்பாலி…

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மம்முட்டியை வைத்து தான் இயக்கிய பேரன்பு படம் மூலம் ரசிகர்களை நெகிழ வைத்தார் இயக்குனர் ராம்,.

அதேசமயத்தில் அவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் வேறுவிதமான களத்தில் இளைஞர்களை மிரள வைத்தது.

இந்தநிலையில் ராம் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில், மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் ரிச்சி என்கிற படம் மூலம் நிவின்பாலி அறிமுகமானாலும் அந்தப்படம் அவருக்கு வெற்றியையும், தமிழில் வரவேற்பையும் பெற்றுத்தர தவறிவிட்டது.

ரிச்சி, மூத்தோன் ஆகிய படங்களில் நடித்தான் மூலம், வித்தியாசமான கலைப்படைப்புகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நிவின்பாலி, இயக்குனர் ராம் டைரக்சனில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றால் அதில் ஆச்சர்யப்பட தேவையில்லை.