விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படம்…. முதல் அப்டேட் வந்தாச்சு!

65

விஜய் சேதுபதி…

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, மாஸ்டர், நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன.

இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.