‘வேலுநாச்சியார்’ படத்தில் நடிக்கின்றாரா நயன்தாரா? அதிகாரபூர்வ அறிக்கை!

69

நயன்தாரா…

ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தகவல் வெளிவந்தது.

சமீபத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதிலும் அதில் நயன்தாரா நடிக்கவிருப்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பீரியட் படத்தில் நயன்தாரா நடிப்பதாக சில செய்திகள் ஊடகங்களில் பரவி வருகின்றன.

நயன்தாரா அந்த படத்தில் நடிப்பதாக வெளிவந்துள்ள தகவலை திட்டவட்டமாக மறுக்கிறார், மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது நயன்தாரா தரப்பில் உறுதி செய்து கொண்டு வெளியிடுமாறு கேட்டு கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனையடுத்து ’வேலுநாச்சியார்’ படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அப்படியெனில் வேலுநாச்சியார் கேரக்டரில் நடிக்கும் நடிகை யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்