அண்ணாத்த படப்பிடிப்பு பிப்ரவரியில் தான் ஆரம்பமா?? படக்குழு வெளியிட்ட அ திர்ச்சி தகவல்!!

86

அண்ணாத்த………

ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஆரம்பமானது. பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் படக்குழுவில் உள்ள நால்வருக்கு கொரோனா தொற்று வந்ததால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

ரஜினிகாந்த்தும் கொரோனா சோதனை செய்து கொண்டதில் அவருக்கு நெகட்டிவ் வந்தது. இருப்பினும் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் சில தினங்கள் சிகிச்சை பெற்று பின் சென்னை திரும்பி மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறார்.

அரசியலுக்கு வரவில்லை என நேற்று ரஜினிகாந்த் அறிவித்து அரசியல் உலகிலும், சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இனி, அவர் சினிமாவில் மட்டுமே தொடர்ந்து நடிப்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாத காலம் வரை அவர் ஓய்வெடுத்தபின் பிப்ரவரியில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை ஆரம்பிப்பார்கள் என தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே எடுத்த காட்சிகளின் இறுதிப் பணிகளை அதற்குள் முடித்துவிடவும் முடிவு செய்துள்ளார்களாம்.

பிப்ரவரிக்குப் பிறகு எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கி எப்படியும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு படத்தை வெளியிடும் அளவில் தயாராவார்கள் எனத் தெரிகிறது.