வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி : தந்தை மறைவு பற்றி அனிதா உருக்கம்!

323

அனிதா…

செய்திவாசிப்பாளரான அனிதா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனித்து விளையாடி 80 நாட்களுக்கு மேல் போட்டியில் தாக்குபிடித்து கடந்தவாரம் வெளியேறினார். வெளியே வந்த இரண்டொரு தினங்களில் அவரின் தந்தையும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் இறந்துவிட்டார்.

சீரடி சென்ற இடத்தில் அவருக்கு இப்படியொரு நிகழ்வு நேர்ந்தது. ரயில் மூலம் சென்னை வந்த அவரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். பிக்பாஸ் போட்டியில் சக போட்டியாளர்களாக இருந்த ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ச்சனா, நிஷா ஆகியோர் அனிதாவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

முன்னதாக நேற்றுமுன்தினம் தனது தந்தையின் உடலை பார்த்து அனிதா கதறிய வீடியோ பார்ப்போரை கண்கலங்க செய்தது. ”நான் தான் உன்னை கூட்டிப்போறேன்னு சொன்னேன்ல, ஏன் என்கிட்ட சொல்லாம போன, சொல்லியிருந்தால் விமானத்தில் கூட டிக்கெட் போட்டு உன்னை சீரடிக்கு அனுப்பி வச்சுருப்பேன்ல…” என கதறினார்.

அவரை கணவர் பிரபா உள்ளிட்ட குடும்பத்தார் சமாதானம் செய்தனர். சம்பத்தின் இறுதிச்சடங்கு நேற்றுமுன்தினம் நடந்தது. இந்நிலையில் தந்தை, தாய் உடன் எடுத்த செல்பி போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ”அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்.

பிக்பாஸ் தனிமைப்படுத்தலுக்கு போகும்போது எடுத்தது. அப்பானா எனக்கு உயிரு. எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன். எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி. ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன். உன்ன வழியிலயே மருத்துவமனை கூட்டிட்டு போய் இருப்பேன்.

நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப. அப்பா மன்னிச்சிடு. என்னால உன்ன காப்பாத்த முடியல, வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி என்ன விட்டு போகாது. எங்க போன ராசா…!” என அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.