திரௌபதி இயக்குனர் படத்தில் நாயகியாக நடிக்கும் சின்னத்திரை பிரபலம்!

531

தர்ஷா குப்தா…

‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை பிரபலம் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களின் இயக்குனர் மோகன்ஜி அடுத்து ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார், இப்போது நாயகியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார்.

பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் தர்ஷா குப்தாவிற்கு நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது.

இதுகுறித்து தர்ஷா குப்தா கூறும்போது, ‘ருத்ரதாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. திரௌபதி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்த ருத்ரதாண்டவம் படத்திற்கு, இப்போதே கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மோகன்ஜி படத்தில் நடிப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது. இந்தப்படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும். என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட்ட படைப்பை கொடுத்த, மோகன் ஜியுடன் என்பதை நினைக்கவே நான் சந்தோஷம் கொள்கிறேன்’ என்றார்.