லீக் ஆன ‘வலிமை’ ஸ்டில்: அஜித்தின் அம்மா வேடத்தில் இவரா?

105

வலிமை..

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கடந்த ஒரு வருடமாக எந்தவித அப்டேட்டும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் அஜித்தின் மேனேஜர் தக்க சமயத்தில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்து இருந்தார். இதனை அடுத்து வரும் புத்தாண்டு தினத்திலாவது ‘வலிமை’ படத்தின் அப்டேட் வரும் என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று இரவு முதல் திடீரென ‘வலிமை’ படத்தின் புதிய ஸ்டில் ஒன்று வைரலாகி வருகிறது. சற்று மங்கலாக இருந்தாலும் இந்த புகைப்படத்த்தில் அஜித்துடன் ‘வலிமை’படத்தில் நடித்த சில நட்சத்திரங்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்த படம் அம்மா சென்டிமென்ட் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புகைப்படத்தில் அஜீத்தின் அம்மாவாக நடித்து இருப்பது பழம்பெரும் நடிகை சுமித்ரா என்று தெரியவந்துள்ளது.

’பணக்காரன்’ திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும், ‘சிங்காரவேலன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாகவும் நடித்தவர் சுமித்ரா என்பதும் தற்போது அவர் தல அஜீத்துக்கும் அம்மாவாக ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது