கடைசில என்னையும் நடிக்க வச்சிட்டாரு: மாஸ்டர் விஜய் குறித்து இயக்குநர் ஓபன் டாக்!

75

மாஸ்டர்………

மாஸ்டர் படத்தில் விஜய் இயக்கத்தில் நடித்தது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். கார்த்தியின் கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சூப்பர் படம் மாஸ்டர். தளபதி விஜய்யின் 64ஆவது படம்.

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, பிரிகிதா, கௌரி கிஷான், நாசர், சஞ்சீவ், சாந்தணு என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளதாகவும், அவரது காட்சிகளை விஜய் இயக்கியுள்ளதாகவும் தகவல் வந்தது. தற்போது இது குறித்து, லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
நீ எல்லோரையும் நடிக்க வைத்து டார்ச்சர் பண்ணுற, நீயும் ஒரு சீன்ல நடிக்கணும் என்று சொன்னார்.

அவர் சும்மாதான் சொல்லுறாரு, அப்புறம் மறந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், கடைசி நாள் ஷூட்டிங் வரை அவர் அதனை மறக்கவில்லை. சரி, நான் நடிக்க வேண்டுமென்றால், நீங்கதான் டைரக்ட் பண்ண வேண்டும் என்று சொன்னேன்.
அப்படி சொன்னா விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், டைரக்ட் பண்ணுவதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டார். அப்புறம் என்ன, விஜய் தான் ரெடி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் என்று சொன்னார். நான் நடித்தேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.