வீட்டிலேயே மகளோட திருமணத்தை நடத்திய நடிகர்!!

636

நடிகர் ரமேஷ் அராவிந்த்……….

நடிகர் ரமேஷ் அராவிந்த் தனது மகளின் திருமணத்தை வீட்டிலேயே நடத்தி அனைவரது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.

மனதில் உருதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த். உன்னால் முடியும் தம்பி, பெண்மணி அவள் கண்மணி, கேளடி கண்மணி, சதிலீலாவதி, பாட்டு வாத்தியார், கண்டேன் சீதையை, அவ்வை சண்முகி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகரோடு மட்டுமல்லாமல், பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். கமல் ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தின் மூலம் தமிழில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களை இயக்கியுள்ளார்.

இப்படி தன்னை ஒரு ஜாம்பவான காட்டிய ரமேஷ் அரவிந்த் தனது மகளின் திருமணத்தை ஒரு வார நிகழ்வாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். முதலில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார். ஆனால், அதனையே ஒரு வார விழாவாக நடத்தி முடித்துள்ளார்.

ரமேஷ் அரவிந்தின் மகளும், தயாரிப்பு மேலாளருமான நிஹாரிகா, டிஜிட்டல் வடிவமைப்பாளர் அக்‌ஷய் என்பவரை கரம் பிடித்துள்ளார். நிஹாரிகா – அக்‌ஷய் திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை ரமேஷ் அரவிந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது