க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன்!

35

க்ரிஷ்-4…

இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு முழுமையான சூப்பர் ஹீரோ படமாக அறியப்படுவது ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘க்ரிஷ்’ படம் தான்.

தற்போது இதன் நான்காம் பாகமாக க்ரிஷ்-4ஐ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கிரிஷ் படங்களின் இயக்குனரும், ஹிருத்திக் ரோஷனின் தந்தையுமான ராகேஷ் ரோஷன்.

முந்தைய இரண்டு பாகங்களிலும் டாக்டர் ரோஹித் மற்றும் க்ரிஷ் என தந்தை மகனாக இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் ஹிருத்திக் ரோஷன்..

இந்த மூன்றாவது பாகத்தில் தந்தை, மகன் மட்டுமல்லாது, கூடுதல் பொறுப்பாக சூப்பர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறாராம் ஹிருத்திக் ரோஷன்.

இந்தப்படத்தின் நாயகியும் ஹிருத்திக் ரோஷனுக்கு உதவியாக சூப்பர் பவர் கொண்டவராக நடிக்க இருக்கிறாராம்.