திடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி!

51

தீபிகா படுகோனே…

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும் மாற்றப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அக்கவுண்டுகள் ஹாக் செய்யப்பட வில்லை என்றும், அவரே புகைப்படங்களை வேண்டும் என்றே நீக்கியதாகவும் கூறப்படுகிறது.