பிரசாந்தின் ‘அந்தாதூன்’ ரீமேக் பட டைட்டில் அறிவிப்பு!

108

பிரசாந்த்…

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ’அந்தகன்’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை ஜேஜே பெடரிக் இயக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என டைட்டில் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான இந்த படம் கோலிவுட்டிலும் ஹிட்டாகுமா? இதன்மூலம் பிரசாந்துக்கு ஒரு திருப்புமுனை தமிழ் திரையுலகில் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.