நியூ இயர் 2021 ஸ்பெஷல்: அடுத்த படத்துக்கு பூஜை போட்ட விஷால்!

66

விஷால்…

விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு நேற்று ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பூஜை போடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

செல்லமே படத்தைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை உள்பட பல ஆக்‌ஷன் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2 படத்தில் நடிப்பதோடு அந்தப் படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கான பூஜை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.