அந்த நடிகைதான் எனக்கு வேணும்! இயக்குநர்களுடன் அடம் பிடிக்கும் நடிகர் ஜெயம் ரவி!

552

ஜெயம் ரவி..

குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் பெரிய இடத்தினை பிடிப்பது கடினம். அந்தவரிசையை பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி 25 படங்களில் நடித்து வந்து முன்னணி நடிகரானா.

இந்நிலையில் படங்களில் நடிகைகளை தேர்வு செய்வதில் ஜெயம் ரவி இந்த நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார் என்று பரவலாக பேசப்பட்டடு வருகிறது.

இதுபற்றி ஜெயம் ரவியிடம் கேட்டபோது, ஹீரோயின்கள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை என்றும், அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவு எடுப்பதுதான் எனவும் தெளிவாக கூறியுள்ளார். மேலும் கதையை தேர்வு செய்வது மட்டும்தான் என் வேலை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெயம்ரவி மீது வேண்டுமென்றே தேவையில்லாமல் ஹீரோயின் சம்பந்தப்பட்ட வதந்தியை கிளப்பியுள்ளது அவருக்கு மன சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஜெயம் நடித்து வரும் பொங்களுக்கு வெளியாக இருக்கும் பூமி படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.