புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்!

62

டி.இமான்…

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார்.

“DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் டி.இமான். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது.

முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.