‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தில் ஒரு சர்ப்ரைஸ்: ஆர்வாமாக ரசிகர்கள்!!

126

கார்த்தி………

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சோழப்பேரரசின் கதை ’ஆயிரத்தில் ஒருவன்’ என்பதும் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்கள் என்பதும், அனைவருடைய நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கிளைமாக்ஸே இரண்டாம் பாகத்தை தொடரும் வகையில் இருந்தது என்பது இந்த படம் பார்த்த அனைவரும் அறிந்த ஒன்று

இந்த நிலையில் ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன என்பதும் ரசிகர்களும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எதிர்நோக்கி ஒருசில ஆண்டுகளாக காத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் செல்வராகவன் ’ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செல்வராகவன் அறிவித்துள்ளது மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகவுள்ளது. இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணைவது எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் இருதரப்பு ரசிகர்களின் உச்சகட்ட உற்சாகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது