30 ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜாவுடன் இணையும் இயக்குனர்!

147

வசந்த்………

தமிழ் திரையுலகில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த ’கேளடி கண்மணி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் வசந்த். அதன்பின்னர் ’நீ பாதி நான் பாதி’ ’ஆசை’ ’நேருக்கு நேர்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கினார் வசந்த். இவர் இயக்கிய ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ள இயக்குனர் வசந்த், அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’கேளடி கண்மணி’ படத்தை அடுத்து 30 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்து வசந்த் பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வசந்த் மற்றும் இளையராஜா இணைந்த ’கேளடி கண்மணி’ திரைப்படத்தில்தான் ’மண்ணில் இந்த காதல்’ என்ற எஸ்பிபியின் மூச்சு விடாத பாடல் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இளையராஜாவுடன் இணைவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த படத்தின் கதைக்கு இளையராஜாவை தவிர வேறு யார் இசை அமைத்தாலும் சரியாக இருக்காது என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும், இந்த பிஸியான ஷெட்யூல்களிலும் இசைஞானி அவர்கள் தனது படத்தை ஒப்புக் கொண்டதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இயக்குனர் வசந்த் தெரிவித்துள்ளார்.