ரியோ மனைவிக்கு பாராட்டு தெரிவித்த தமிழ் நடிகை!!

72

ரியோவின் மனைவி……..

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதும் சென்டிமென்ட், மகிழ்ச்சி, கலகலப்பு ஆகிய அனைத்து உணர்வுகளும் இந்த வருகையின்போது இருந்தது என்பதையும் பார்த்தோம்

குறிப்பாக ரியோவின் மனைவி ஸ்ருதி வருகையின்போது சென்டிமென்ட் உச்சகட்டமாக இருந்தது. ரியோ தனது மனைவியை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுததும்,

அதன்பின் அவரிடம் கலகலப்பாக பேசியதும் குறிப்பாக வீடியோ மூலம் தனது குழந்தையை பார்த்து நெகிழ்ந்த காட்சிகளும் பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது

இந்த நிலையில் கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தனது கருத்துக்களை விமர்சனமாக தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ரியோ மனைவி ஸ்ருதி வருகை குறித்து அவர் கூறியபோது ’ரியோவின் மனைவி வருகை பாசிட்டிவ் மற்றும் கியூட் ஆக இருந்தது’ என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இதற்கு ஸ்ருதி, ஸ்ரீப்ரியாவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டுகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது