மீண்டும் சுசீந்திரன் உடன் கூட்டணி – உறுதி செய்த சிம்பு!

63

சிம்பு…

சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது.

கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு தான் அடுத்ததாக நடிக்கும் படங்கள் குறித்து தெரிவித்தார்.

ஈஸ்வரனுக்கு பின் மாநாடு, பத்து தல போன்ற படங்களில் நடிக்க உள்ள சிம்பு, அதன்பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.

அப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் அவர் கூறினார்.

இதுதவிர மேலும் மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்த சிம்பு, அதை இயக்கப்போவது யார் யார் என்ற தகவலை வெளியிடவில்லை.