லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட போஸ்டர் – ஆனா இது வேற மாஸ்டர் படம்!

84

சாண்டி…

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் புகழடைந்தவர் சாண்டி. சாண்டி மாஸ்டர் என அழைக்கப்படும் இவர், போட்டியாளராக இருந்து நடன இயக்குனராக் உயர்ந்தவர்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் செல்லமாக இருந்தவர். பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக இருந்தவர் கவின், தர்ஷன், லாஸ்லியாவுடன் சேர்ந்து we are the boys என ரகளை செய்துகொண்டிருந்தார்.

மிகவும் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்ததால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். வாலு, காதலும் கடந்து போகும், கெத்து, காலா, சண்டக்கோழி 2 போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக இருந்துள்ளார்.

வெளியே வந்த பிறகும் எல்லோருடனும் நட்பில் உள்ள சாண்டி, 3.33 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் இந்த படம் நேரம் அடிப்படையிலான ஒரு திகில் திரைப்படமாக உருவாகிறது.

இந்த படத்தின் போஸ்டரை கைதி, ,மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

திரை பிரபலங்கள் பலரும் சாண்டி மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.