சிம்பு பட இயக்குனருக்கு கொரோனா…. படப்பிடிப்பு ரத்து!

71

படப்பிடிப்பு ரத்து…

சிம்பு பட இயக்குனர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ். இவர் தமிழில் சிம்பு, அனுஷ்கா நடிப்பில் வெளியான வானம் படத்தை இயக்கி உள்ளார்.

தெலுங்கில் அனுஷ்கா நடித்து வேதம் என்ற பெயரில் இவரது இயக்கத்திலேயே வெளியான படத்தின் தமிழ் ரீமேக்காக வானம் வந்தது.

பாலகிருஷ்ணா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான கவுதமி புத்ரா சதகர்னி என்ற சரித்திர படத்தையும் இயக்கி உள்ளார்.

மேலும் தெலுங்கில் ராணா, நயன்தாரா நடித்த கிரிஷ்ணம் வந்தே ஜகத்குரம், மறைந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையான என்.டி.ஆர் கதாநாயகுடு, இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த மணிகர்னிகா உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். அடுத்து பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இதன் படப்பிடிப்பை இன்று தொடங்க தயாராகி வந்தார். முன்னதாக படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இயக்குனர் கிரிஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கிரிஷ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.