பிக்பாஸ் பிரபலத்துக்கு குழந்தை பிறந்தாச்சு! மருத்துவமனையிலிருந்து வெளியான புகைப்படம் இதோ! மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் நடிகர்!

79

பிக்பாஸ்……..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி போட்டியாளர்களும், வெற்றி வாய்ப்பு யாருக்கு என ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி, கோபம், சண்டை என கார சாரமாக நிகழ்ச்சி செல்கிறது.

இந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் செண்ட்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அவரின் மனைவி கயல்விழி தாயானதை நாம் அறிவோம்.

ஏன்கனவே ஆண் குழந்தை இருக்கும் நிலையில் 2021 ல் புதுவரவாக மீண்டும் ஆண் குழந்தைக்கு செண்ட்ராயன் தந்தையாகியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2ல் அவர் குழந்தைக்காக ஏங்கியதையும், தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தெரிந்ததும் அவர் தரைக்கும் வானத்திற்கும் குதித்ததை ரசிகர்கள் மறப்பார்களா என்ன? தற்போது மனைவி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் வாழ்த்து கூறியுள்ளனர்.