மீண்டும் இணையும் ரவுடி பேபி காம்போ!

90

தனுஷ்…

தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரவுடி பேபி பாடல் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் நடின இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அனுபவங்களைக் கொண்டவர் பிரபு தேவா.

பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது வரை 26 கோடி ரசிகர்களை சென்று அடைந்து இருக்கிறது.

மேலும் இணையத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தப் பாடல் என்ற அடையாளத்தையும் இது பெற்று தந்திருக்கிறது. இந்தப் பாடலில் நடிகர் தனுஷ் – நடிகை சாய்பல்லவி ஆகிய இரண்டு பேரும் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபுதேவாவுடன் அரட்டை அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரவுடி பேபி காம்போ மறுபடியும் உருவாக போகிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.