நான் லேடி விஜய்சேதுபதியாக விரும்புகிறேன்: பிரபல நடிகை பேட்டி!

95

நிவேதா…..

தினேஷ் நடித்த ’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’பொதுவாக என் மனசு தங்கம்’ ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ பிரபுதேவா நடித்த ’பொன்மாணிக்கவேல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழில் பார்த்து ’ஜெகஜால கில்லாடி’ உள்பட ஒருசில படங்களிலும் தெலுங்கில் ’ரெட்’ உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அவர் தனது திரையுலக பயணம் பற்றி நிவேதா பெத்துராஜ் கூறுகையில் ’நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதாகவும், கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக தற்போது கடினமான முகத்தை வைத்துக்கொண்டு போலீஸ் கேரக்டரில் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் முதலில் கஷ்டப்பட்டாலும் பின்னர் தனக்கு பழகி விட்டதாகவும் அவர் கூறினார்

இந்த நிலையில் ஒரே விதமான கேரக்டரில் நடிக்காமல் அனைத்துவித கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் குறிப்பாக விஜய் சேதுபதி வில்லன் உள்பட அனைத்து விதமான கேரக்டர்களில் நடிப்பது போல் நான் ’லேடி விஜய்சேதுபதி’ போல வித்தியாசமான அனைத்து கேரக்டர்களிலும் நடிக்க வேண்டுமென விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

ஒரு நடிகரால் அனைத்து விதமான கேரக்டரில் நடிக்கும்போது ஒரு நடிகையாலும் ஏன் அனைத்து விதமான கேரக்டரிலும் நடிக்க முடியாது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். நிவேதா பெத்துராஜ் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது