அடுத்த படம் குறித்து செல்வராகவனின் முக்கிய தகவல்!!

82

செல்வராகவன்…………

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் இயக்காத நிலையில் தற்போது அடுத்தடுத்து தனது படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் செல்வராகவன் தொடர்ச்சியாக இரண்டு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களிலும் தனுஷ் தான் நாயகன் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தனுஷ் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் படத்தை செல்வராகவன் முதலில் இயக்க இருப்பதாகவும் இது செல்வராகவன் இயக்கும் 12வது படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டது என செல்வராகவன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்வராகவனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.