லண்டனில் இருந்து வந்த ஆதித்ய வர்மா பட நடிகைக்கு கொரோனா!

74

நடிகை பனிடா…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதித்ய வர்மா பட நடிகை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டனில் இருந்து வந்த ஆதித்ய வர்மா பட நடிகைக்கு கொரோனா
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்தவர் பனிடா சந்து. பாலிவுட் நடிகையான இவர், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகை பனிடாவிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து வந்த பனிடா, இந்தி பட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா வந்துள்ளார். அப்போது அவருடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பனிடாவிற்கும் பரிசோதனை செய்ததில் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்,

ஆனால் அவர் அரசு மருத்துவமனை சுகாதாரமின்றி இருக்கும் எனக்கூறி செல்ல மறுத்ததால், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். அவருக்கும் உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அவரது மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.