என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் – அருண் விஜய் எச்சரிக்கை!

95

அருண் விஜய்…

என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அருண்விஜய்யின் பெயரை வைத்து இளம் பெண்களை ஏமாற்றி வரும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்றுக்கு நடிக்க ஆர்வம் உள்ள இளம் பெண்கள் தேவை என்ற பொய் விளம்பரம் ஒன்று எப்படியோ அருண்விஜய் கண்ணில் பட்டுவிட்டது.

இதனால் பதறிப்போன அருண் விஜய் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற பொய்யான அறிவிப்புகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள் என அதிகாரப்பூர்வமாக தன்னுடைய பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்களில் மோசடிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.