அழகை காட்டி ஆண்களை மயக்கிய நடிகை : வெளியான வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!!

866

சுருதி

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோ சடி செய்த வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர்.

இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து பாலமுருகன் அந்த பணத்தை சுருதி வங்கி கணக்கில் செலுத்திய பின்னர் அவருடனான தொடர்பை சுருதி துண்டித்தார்.

இதையடுத்து சுருதி மோ சடி பேர்வழி என்பதை உணர்ந்த பாலமுருகன் பொலிசில் புகார் அளித்தார். விசாரணையில் வெளிநாட்டில் வாழும் பலரிடம் சுருதி மோ சடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் சுருதி உள்ளிட்ட மூவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று கோவை சைபர் க்ரைம் பொலிஸ் அலுவலகத்துக்கு வந்த சுருதி புகார் ஒன்றை கொடுத்தார். பின்னர் நிரூபர்களிடம் பேசிய அவர், நான் கைதுசெய்யப்பட்ட போது ஒளிபரப்பான வீடியோக்கள், சமூக வளைதளங்களில் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக என்னுடைய திருமணம் தடைபடுகிறது.

எனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்திரிக்கப்பட்டு பரப்பப்படுவதோடு எனது குடும்பத்தினர் குறித்தும் அசிங்கமான வகையில் தகவல்களைப் சிலர் பரப்புகின்றனர். இது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றவேண்டும் என புகார் கொடுத்தேன் என கூறியுள்ளார்.