போலி என்கவுண்டர்களை விசாரிக்கும் ஆபிசர் – சிம்டாங்காரன் விமர்சனம்!

816

சிம்டாங்காரன்…

மும்பையில் தொடர்ந்து என்கவுண்டர்கள் செய்து வருகிறார் போலீஸ் அதிகாரி அன்வர். இவர் செய்த என்கவுண்டர்கள் போலியானது என்று கருதி மும்பை உயர்நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைகிறது.

அவ்வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான நாகார்ஜுனா நியமிக்கிறார்கள். நாகார்ஜுனாவின் விசாரணையில் அன்வர் பற்றிய பல உண்மைகள் தெரிய வருகிறது. அன்வரும் நாகார்ஜுனாவை விசாரிக்க விடாமல் தடுக்கிறார்.

இறுதியில் அன்வர் பற்றிய விவரத்தை நாகார்ஜுனா கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. ஆக்ஷன் திரில்லர் படமாக 2018 ஆம் ஆண்டு ‘ஆபிசர்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தற்போது ‘சிம்டாங்காரன்’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியாகி உள்ளது.

நாயகனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா, தனக்கே உரிய பாணியில் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அவருக்கு மகளாக பேபி காவியா அறிமுகமாகி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மயிரா சரீன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் ராம் கோபால் வர்மா. அரசியல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார்.

ரவிசங்கர் இசையில் பாடல் அனைத்தும் ரசிக்கும் விதம். பரத் வியாஸ் மற்றும் ராகுல் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் சிம்டாங்காரன் சிறப்பானவன்.