‘மாஸ்டருக்கு பின் ரிலீஸாகும் பிரபல நடிகரின் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

96

மாஸ்டர்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

அதே நேரத்தில் ஜெயம்ரவியின் ’பூமி’ திரைப்படமும் பொங்கல் திருநாளில் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொங்கல் திருநாளில் மூன்று பிரபல நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படங்களின் ரிலீசை அடுத்து இரண்டே வாரங்களில் அதாவது ஜனவரி 26 ஆம் தேதி விஷ்ணு விஷாலின் ’காடன்’ திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஷ்ணு விஷாலின் திரைப்படம் எதுவும் ரிலீஸாகவில்லை என்ற நிலையில் தற்போது அவர் நடித்த ’காடன்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

’காடன்’ திரைப்படம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ’ஆரண்யா’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா டகுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.