தனுஷ் – மாளவிகா மோகனன் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை!

622

நடிகை…

தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ்,

அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்மிருதி வெங்கட் இதற்கு முன் தடம், மௌன வலை, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.