ரியோ கோமாளியா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ரவி!

83

ஸ்ருதி ரவி…

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும், அவர் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வருகிறார் என்பதும் பைனலுக்கு செல்லும் நான்கு பேர்களில் கண்டிப்பாக அவரும் ஒருவராக இருப்பார் என்றும் அவரது ஆர்மியினர் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ரியோ மீது ஒருசில கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவிக்கு வேண்டப்பட்டவர் என்றும் ஒரு குரூப்பில் இருந்து கொண்டு அந்த குரூப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரியோ மீதான விமர்சனங்கள் கடுமையாகி வருகிறது. குறிப்பாக அவர் ஆரியுடன் சண்டை போட ஆரம்பத்ததில் இருந்து ரியோவை கோமாளி என்றும் அவர் செய்வது அனைத்துமே கோமாளித்தனமாக இருப்பதாகவும் ஒரு சிலர் விமர்சனம் செய்தனர்.

இந்த விமர்சனத்திற்கு ரியோவின் மனைவி ஸ்ருதிரவி பதிலடி கொடுத்துள்ளார். கோமாளி என்றால் மற்றவர்களை சிரிக்க வைப்பவர். தன் எதிரே உள்ளவர்களை சிரிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் அதை கோமாளிகள் மிக எளிதாக செய்வார்கள்.

அந்த வகையில் ரியோவை மறைமுகமாக கோமாளி என விமர்சனம் செய்பவர்களை நான் அவரது நகைச்சுவை தன்மை குறித்து பேசுவதாக எடுத்துக்கொள்கிறேன். ரியோவை ஒரு நல்ல எண்டர்டெயினராகவே அவர்கள் பார்ப்பதாகவும் கருதுகிறேன். தயவு செய்து அன்பை பரப்புங்கள், பாசிட்டிவ் எண்ணங்களை பரப்புங்கள். எதிர்மறை விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ரியோவை கோமாளி என்று கூறும் சில கருத்துக்களை பார்த்து நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். தனது வலியை மறைத்து, மற்றவர்களை தன்னால் முடிந்தவரை சிரிக்க வைப்பதுதான் கோமாளியின் குணம் என்பதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். என்னுடைய அன்புக்குரியவர் கோமாளியாகவே இருந்துவிட்டு போகட்டும், அவர் அப்படியே உத்வேகமாக இருக்கட்டும்’ என்று ஸ்ருதி ரவி தெரிவித்துள்ளார்