பாரதி கண்ணம்மா…………
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியல் TRPயில் ஹிட்டடித்து வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனின் தங்கையாக நடித்து வந்த காவ்யா என்ற நடிகை இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வேடத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் அவரால் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதை தொடர முடியவில்லை போல் தெரிகிறது.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேற இருப்பதால் அந்த படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து மிஸ்ஸிங் (Missing) என பதிவு செய்துள்ளார்.
ரசிகர்கள் இனி காவ்யா பாரதி கண்ணம்மாவில் இல்லையா என கொஞ்சம் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.