நடிகை வரலட்சுமியின் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

1209

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி படத்தின் படப்பிடிப்பில் நடந்த தீவிபத்தில் தாயும் மகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போடா போடி, சர்க்கார் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது ரணம் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது.

அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருடந்த 5 வயது சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.