மரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் – வி விமர்சனம்!!

643

“வி” விமர்சனம்…

வசதியான ஐந்து நண்பர்கள் தனது காதலிகளுடன் பைக்கில் சுற்றுலா செல்கிறார்கள். இதில் நாயகன் ராகவ்வின் காதலி லூதியா, ஒரு புதிய ஆப் இருப்பதாகவும் அதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறப்பு தேதியை தெரிவிக்கும் என்றும் கூறுகிறார்.

இதை நம்ப மறுக்கும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அனைவருடைய பிறந்த தேதியும் பதிவு செய்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே நாளில் இறக்க இருப்பதாக அதில் காண்பிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் நண்பர்களுக்கு சில அமானுஷ்ய சம்பவங்களும், நண்பர்களின் இறப்புகளும் ஏற்படுகிறது.

இறுதியில் அந்த ஆப் – பில் இருப்பது போல் அனைவரும் இருந்தார்களா? இல்லையா? எதனால் அவர்களுக்கு இப்படி நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரையில் நடித்து வந்த ராகவ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் லூதியா மற்றும் நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன். அடுத்தடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும், எதனால் நடக்கும் என்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் பைக் ஓட்டும் காட்சியே அதிகம் இருப்பதால் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் உள்ள பலவீனம் இரண்டாம்பாதியில் பலமாக அமைந்துள்ளது.

இளங்கோ கலைவாணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அனில் கே சாமியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘வி’ வித்தியாசம்.