24 மணி நேரத்தில் மிரட்டலான சாதனை! எந்த நடிகரும் செய்யாதது! ராக் ஸ்டார் கலக்கல்!

35

KGF 2…

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் யஷ் தற்போது KGF 2 படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரூ 80 கோடி பட்ஜெட்டில் இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 2018 ல் வெளியாகி ரூ 250 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் K.G.F: Chapter 2 என எடுக்கப்பட்டு வருகிறது. ரூ 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. ஹீரோ யஷ் நேற்று முன்தினம் தன் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த முக்கிய நாளை முன்னிட்டு படக்குழு நேற்று டீசரை வெளியிட்டது.

24 மணி நேரத்தில் இது 78 மில்லியன் பார்வைகளை அள்ளி பெரும் சாதனை படைத்துள்ளது.

மேலும் 42 மில்லியன் லைக்குகளையும் வாங்கி குவித்துள்ளது. வரலாற்றில் எழுதப்பட்ட சரித்திரமாக இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் என முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.