விராத்-அனுஷ்கா தம்பதிக்கு பிறந்த தேவதை: ரசிகர்கள் வாழ்த்து!

65

விராத்-அனுஷ்கா..

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அனுஷ்கா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜனவரியில் அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் விராத் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்களது குழந்தை இந்த உலகில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி உள்ளதாகவும் அந்த குழந்தைக்கு அனைவரின் ஆசியும் தேவை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலி-அனுஷ்கா தம்பதிக்கும் அவர்களுக்கு பிறந்த தேவதை போன்ற குழந்தைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனுஷ்காவிற்கு குழந்தை பிறக்கும் போது அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே விராட் கோலி 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடாமால் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)