பிக்பாஸ் குறித்து சுரேஷ் தாத்தாவின் அதிர்ச்சி பதிவு!

67

சுரேஷ் சக்ரவர்த்தி…

பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய முதல் மற்றும் இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் வந்தார்கள் என்பதை பார்த்தோம்.

அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா ஆகியோர்கள் நேற்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் மக்களின் அதிக ஆதரவை பெற்ற சனம் ஷெட்டி மற்றும் அனிதா வேல்முருகன் உள்பட மற்றவர்கள் ஏன் வரவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஒருவேளை அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் வரலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு நீங்கள் ஏன் வரவில்லை என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

சுரேஷ் சக்கரவர்த்தியின் இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி

ஆரம்பத்திலேயே எவிக்ட் ஆனது ரசிகர்களுக்கு ஏற்கனவே அதிர்ச்சியாக இருந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் தற்போது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.