முடிந்து போன வாழ்க்கை! மறுபடியும் என்ன ஆச்சு தெரியுமா? பலருக்கும் தெரியாத விசயம்!

55

மொட்டை ராஜேந்திரன்…

தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு தங்கள் திறமைகளை நிரூபிக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் சிலருக்கு வாய்ப்புகள் எளிதாக அமைந்து விடுகிறது. படிப்படியாக முன்னேறி தவிர்க்க முடியாத இடம் பிடிப்பது என்பது பாராட்ட வேண்டிய ஒன்று.

அப்படியாக சாதாரண நடிகராக அறிமுகமாகி, பின் வில்லன் நடிகராக மாறி, பின் காமெடி நடிகராக திரையில் கலக்கிக்கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். அவர் தற்போது தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். அவர் காமெடி காட்சிகளில் வந்து போனாலே ஒரே சிரிப்பு தான். ரசிகர்களை சந்தோசப்படுத்திவிட்டு செல்வார்.

இவரின் திறமை கண்டு இயக்குனர் பாலா தன்னுடைய நான் கடவுள் படத்தின் மூலம் அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கி கொடுத்தார் என்பதை மறக்க முடியாது.

பொதுவாக இளமை காலத்தில் அதிகம் சம்பாதிக்க வேண்டும், செட்டில் ஆக வேண்டும் என்று சொல்லுவார்கள். 40 வயது வரை கடினமாக உழைக்க வேண்டும் என கூறுவார்கள். 40 வயதில் வாழ்க்கையே முடிந்துவிடும் என கூறுவார்கள். ஆனால் ராஜேந்திரனுக்கு 40 வயதில் தான் வாழ்க்கையே தொடங்கியதாம்.

தைரியமாக துணிந்து எந்த காட்சியிலும் நடிக்கும் அவர் மலையாள சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது குளத்தில் குதித்துள்ளார். பின்னர் அது ரசாயன ஆலை கழிவு நீர் என தெரிந்துள்ளது. ஆனால் தலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, தன் அழகான கர்லிங் ஹேர் முடியை அவர் இழந்தது ஃபிளாஷ் பேக் ரகசியம்.

1992 ல் தொடங்கி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஆர்யா, ஜி.வி.பிரகாஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்திருப்பது இவர் செய்த சாதனையே!