விஜய்யின் மாஸ்டர் படத்திற்காக தெலுங்கு சினிமா ரசிகர்கள் செய்த மாஸான விஷயம்- அதுதான் தளபதி, தெறிக்கவிடலாமா!!

81

விஜய்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு பிரம்மாண்டமாக நாளை (ஜனவரி 13) ரிலீஸ் ஆகவுள்ளது. திரைப்படத்தை பார்க்க மாஸ்டர் பட பிரபலங்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் படத்தின் ஒரு காட்சி லீக் ஆகியிருந்தது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவிலும் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம் சரண் ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பெரிய பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.