முதல் நாள் புக்கிங்கில் மட்டும் விஜய்யின் மாஸ்டர் இவ்வளவு வசூலித்ததா?- தெறி மாஸ் ஆரம்பம்!

85

மாஸ்டர்…

கைதி என்ற வெற்றிப்படத்தை கொடுத்ததான் மூலம் விஜய்யின் 64வது படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜிற்கு கிடைத்தது.

வெற்றிகரமாக அவரும் மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கிவிட்டார். படமும் நாளை ஜனவரி 13ம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரசிகர்களும் படு உற்சாகமாக முதல் நாள் காட்சிக்கு டிக்கெட்டுகள் புக் செய்து வருகிறார்கள்.

அப்படி சென்னையில் இதுவரை மட்டும் திறந்துள்ள 24 திரையரங்குகளில் 488 ஷோக்கள் புக் செய்யப்பட்டுள்ளதாம்.

அவை கணக்கு செய்தபோது இதுவரை ரூ. 1.21 கோடி வசூலித்துள்ளதாம். ஆரம்பமே தெறி மாஸாக தொடங்கி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.