நான் வராததற்கு ஒரு லேடி தான் காரணம்: சுரேஷ் குறிப்பிட்ட அந்த லேடி யார்?

93

சுரேஷ் சக்ரவர்த்தி…

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக எவிக்டான போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஷிவானி, சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய மூவர் தவிர மற்ற அனைவரும் வந்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

ஷிவானி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எவிக்ட் ஆனதால் அவர் கடைசியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனிதா மற்றும் சுரேஷ் வராததற்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில்,

சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சுரேஷ் சக்கரவர்த்தி எனக்கு பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைக்காத போது நான் எப்படி வரமுடியும் என்றும் ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளராக கருதுகிறார்களோ என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட சேனலை நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி ’இதற்கு சேனல் காரணம் இல்லை. ஒரு லேடி தான் இதற்கு காரணம் என்று சுரேஷ் கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்தியின் வரவை தடுத்த அந்த லேடி யார் என்பதே தற்போதைய நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.