பிக்பாஸ் தர்ஷனின் உண்மை முகமே இதுதான் : போட்டுடைத்த இளம் நடிகர்!!

1060

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 க்கு இலங்கையை சேர்ந்த தர்ஷன் போட்டியாளராக வந்துள்ளார். அவருக்கு பெண் ரசிகைகள் நிறைய கிடைத்துள்ளார்கள்.

வெளியில் மட்டுமில்லாது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அனைவருக்கும் பிடித்தமான நபராக இருக்கிறார். அவருக்கும் அண்மையில் சில விசயங்களில் கோபம் வருகிறது.

அதை தூண்டிவிட்டது வனிதா என்பது உங்களுக்கே தெரியும். இந்நிலையில் அவருடன் படத்தில் பணியாற்றிய நடிகர் டாம் அபிலாஷ், தர்ஷன் பற்றி பேசியுள்ளார்.

தர்ஷன் மிக பணிவாக இருப்பான். ஹீரோ என அலட்டல் இருக்காது. சாதாரணமாக இருப்பான். நிறைய விசயங்கள் பேசுவான். ஆனால் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அவனை 5 சதவீதம் மட்டுமே காட்டியுள்ளார்கள் என தோன்றியது.

தற்போது அவனை அதிகம் காட்டுகிறார்கள். நிறைய பேசுவது தெரிகிறது. தர்ஷணுக்கு கோவம் வரும். வந்தால் அவ்வளவு தான். முகமே காட்டிவிடும் என கூறியுள்ளார்.