அதை மட்டும் கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க: ‘மாஸ்டர்’ படக்குழுவுக்கு பிக்பாஸ் கவின் வேண்டுகோள்!

67

கவின்…

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு பிரமுகர்களும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தை பாராட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கவின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தை பார்த்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

‘எவ்வளவு நாளாச்சு தியேட்டரை பார்த்து, ரசிகர்களை தியேட்டருக்கு வர வைத்த தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் பின்குறிப்பு என பதிவு செய்து ’அந்த கபடி தீம் மியூசிக்கை மட்டும் கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பண்ணி விடுங்க’ என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற கபடி காட்சியில் அனிருத் கம்போஸ் செய்த கபடி தீம் மியூசிக் அட்டகாசமாக இருந்தது என்று ஏற்கனவே விமர்சகர்கள் பாராட்டியுள்ள நிலையில் அந்த தீம் இசையை சீக்கிரம் வெளியிடுங்கள் என் கவின் வேண்டுகோள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.