‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் இணைந்த மேலும் இரு பிரபலங்கள்!

76

பொன்னியின் செல்வன்…

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதும் இந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்பட முக்கிய நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பில் பார்த்திபன் மற்றும் மோகன்ராம் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இருவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர் என்பதும் இவர்களுடைய காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இதனை மோகன்ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் மோகன் பாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது.