5 மாதங்களுக்கு தள்ளிப்போன ஜேம்ஸ்பாண்ட் படம்: என்ன காரணம்?

84

ஜேம்ஸ்பாண்ட்…

உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் என்பது தெரிந்ததே.

இந்த திரைப்படம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த படத்தின் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் சுமாராக 600 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் இதுவரை இந்த படத்தின் வியாபாரம் தொடங்கப்படவில்லை என்பதும் இந்த படத்தின் விலை அதிகமாக இருப்பதாக விநியோகிஸ்தர்கள் சிலர் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ரிலீஸ் நேரத்தில் இந்த படம் மிக அதிக விலைக்கு விற்பனையாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.