அடுத்த படத்திற்கு பூஜை போட்ட நடிகர் பிரபாஸ்!

64

பிரபாஸ்…

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்துக்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் 1′ படத்தைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘சலார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், ‘சலார்’ படத்தின் பூஜை நேற்று (ஜனவரி 15) ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யஷ் கலந்து கொண்டார்.

நேற்று படப்பூஜையுடன் பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழு, இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ‘சலார்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.