வனிதா வீட்டில் மீண்டும் விசேஷம்: நெட்டிசன்கள் வாழ்த்து!

84

வனிதா…

பிக்பாஸ் வனிதா வீட்டில் மீண்டும் விசேஷம் வந்ததை அடுத்து நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

வனிதா- பீட்டர் பால் திருமண விசேஷம் அவரது வீட்டில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்ததாகவும் பீட்டர்பாலை தான் பிரிந்து விட்டதாகவும் வனிதா அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது வனிதாவின் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷ நிகழ்வு நடந்துள்ளது. வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டதாகவும் எனது மகள்கள் உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

வனிதா விஜயகுமாருடன் அவருடைய மகள் ஜெனிதா இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.