இளையராஜா இசையில் ‘பொன்னியின் செல்வன்’: அதிகாரபூர்வ அறிவிப்பு!

95

இளையராஜா…

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யாராய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் வெப்சீரிஸ் ஒன்று தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பது ஏற்கனவே தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அந்த தொடரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அஜய் பிரதீப் என்பவர் திரைக்கதை வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் ஆகிய பணிகளை கவனிக்க, கலை இயக்குனராக சாபுசிரில் பணிபுரியவுள்ளார். இந்த தொடரின் முக்கிய அம்சம் என்னவெனில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கிறார் என்பது தான்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் முதல் வெப்தொடர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.