ஸ்டார் வார்ஸ் படத்தின் பிரபல வில்லன் நடிகர் காலமானார்! – ரசிகர்கள் அஞ்சலி!

74

டேவ் ப்ரவுஸ்…

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டார் வார்ஸ் படத் தொடரில் வில்லனாக நடித்த டேவ் ப்ரவுஸ் காலமானார். இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட டேவ் ப்ரவுஸ் பளு தூக்கும் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

ஸ்டான்லி குப்ரிக்கின் க்ளாக்வொர்க் ஆரஞ்ச் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர் ப்ரான்கன்ஸ்டைன் உள்ளிட்ட ஹாரர் படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு உலகம் முழுவதும் புகழை பெற்று தந்தது ஸ்டார் வார்ஸ் படங்கள்தான்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட வரிசையில் முக்கிய வில்லனாக கருதப்படும் டார்த் வெடார் என்னும் கதாப்பாத்திரத்தில் டேவ் ப்ரூஸ் நடித்தார். பின்னர் அனாகின் ஸ்கைவாக்கர் டார்த் வெடாராக மாறியது குறித்த முன்கதையில் இவர் நடித்தது பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருந்த டேவ் ப்ரவுஸ் தனது 85வது வயதில் நேற்று காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டேவ் ப்ரவுஸின் இறப்பிற்கு ஹாலிவுட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.